Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காசியில் தினந்தோறும் செய்யப்படும் கங்கா ஆரத்தி

காசியில் தினந்தோறும் செய்யப்படும் கங்கா ஆரத்தி
காசியில் உள்ள கங்கை நதிக்கு நன்றிக் கடனாக தினந்தோறும்மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும். கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கைதான்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் உதித்த ஆறு தீப்பொறிகளும் வாயு மற்றும் அக்னி தேவரால் கங்கையில் சேர்க்கப்பட்டன. அதை கங்கா தேவி சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்ப்பித்ததால் ஆறுமுகப் பெருமான் அவதரித்தான்.
 
கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கி புனித மடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக  நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும். இந்த மாபெரும் பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது  வழக்கம்.
webdunia
ஒரே நேரத்தில், ஒரே மாதிரி வெண்ணிற ஆடை அணிந்த பத்து பூசாரிகளால் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக பத்து உயர்ந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற நானாவித உபசாரங்களுடன் ‘கங்கா மாதா’ வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். புனித கங்கை நதிக்கரையில் ஆரத்தி பாட்டு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹோமங்களில் சேர்க்கப்படும் சமித்துகளும் அதன் பலன்களும்...!