Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணக்கஷ்டத்தை போக்க தினமும் இதை செய்தாலே போதும்...!!

Advertiesment
பணக்கஷ்டத்தை போக்க தினமும் இதை செய்தாலே போதும்...!!
நம் வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் அதிகமாக சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால், நல்ல தீர்வைக் காணலாம். அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது கண்ணாடியில் முகத்தை  பார்க்க வேண்டும்.
காலை கடன்களை முடித்து குளித்து முடித்து விட்டு, முதலில் முகத்தை துடைக்காமல், முதுகுப் பகுதியை துணியால் துடைக்க வேண்டும்.
 
உடலை தூய்மை படுத்திய பின் ஈரமான துண்டு அல்லது வேஷ்டியை உடுத்திக் கொண்டு பூஜை அறைக்குள் சென்று, கடவுளை வணங்க  வேண்டும்.
 
பூஜை அறையானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். தினமும் காலையில் பூஜை செய்து முடித்த பின் காகத்திற்கு உணவை வைத்து விட்டு, காலை உணவை சாப்பிட வேண்டும்.
 
சங்கு லஷ்மி தேவியுடன் தொடர்பு உடையதால், அதை நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இதனால் நம் வீட்டின் செல்வம்  அதிகரிக்கும்.
 
பணம் வைக்கும் அலமாரி, பீரோ ஆகியவற்றை வீட்டின் தெற்கு திசையில் வைத்து, அதன் முகம் வடக்கு திசையை நோக்கி அமைக்க  வேண்டும்.
 
படுக்கை அறையில் கட்டில் கால்கள், அலமாரிகள் மற்றும் இதர மரப் பொருட்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சேதமடைந்த மரப் பொருட்கள் வீட்டில் எதிர்மறை சக்தியை ஈர்க்கும்.
 
தினமும் மாலையில் சந்தியா நேரத்தில் நம் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். அல்லது அந்த நேரத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று  கூட வரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநீறு எந்த விரல்களால் அணிந்துகொள்ள கூடாது...?