Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலம்புரி சங்கின் பூஜை முறைகளும் அதன் பலன்களும்.....!!

வலம்புரி சங்கின் பூஜை முறைகளும் அதன் பலன்களும்.....!!
வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய  வாசத்தையும் அருளக்கூடியது.
* வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.
 
* கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.
 
* கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.
 
* ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால்  திருமண பாக்கியம் கைகூடும்.
webdunia
* கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. 16 எண்ணிக்கையில் வலம்புரி சங்கு கோலமிட்டு, நடுவில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்வது நல்லது.
 
* சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.
 
* வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம்  இருக்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவனுடைய அம்சமாக கருதப்படும் ருத்ராட்சத்தின் சிறப்புகள்!!