Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளக்கை துலக்க உகந்த நாட்கள் என்ன தெரியுமா...?

விளக்கை துலக்க உகந்த நாட்கள் என்ன தெரியுமா...?
திருவிளக்கின் சிறப்பு: திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம்  செய்கின்றனர்.
விளக்கு துலக்க உகந்த நாட்கள்: குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம்  இண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறால். செவ்வாய், புதன் கிழமைகளில்  விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்.
 
வியாழன் நள்ளிரவி முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி குடியேறுகிரால். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
 
விளக்கேற்றும் திசை:
 
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் - புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகல நன்மைகளும் உண்டாகும்.
 
விளக்கின் தன்மை:
 
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு - பீடை விலகும்.
வெள்ளி விளக்கு - திருமகள் அருள் கிடைக்கும்.
பஞ்ச லோக விளக்கு - தேவதை வசியம் உண்டாகும்.
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்.
இரும்பு விளக்கு - சனி கிரக தோஷம் விலகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவபெருமான் வழிபாட்டில் வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதால் உண்டாகும் பலன்கள்...!!