Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் எவ்வாறு...?

Advertiesment
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் எவ்வாறு...?
ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தில் இருந்து போபுரத்தை வணங்கி செல்வதை காணமுடியும். கோபுங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இணையானது என்ற நம்பிக்கை காலகாலமாய் இருந்து வருகிறது.
சிற்ப சாஸ்திரத்தின்படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம் என்பர்.
 
இதனையே திருமூலரும்...
 
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே"
webdunia
பாதங்கள் - முன்கோபுரம், முழங்கால் - ஆஸ்தான மண்டபம், துடை - நிருத்த மண்டபம், தொப்புள் - பலி பீடம், மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்), கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி), சிரம் - கர்ப்பகிரகம், வலது செவி - தக்ஷிணா மூர்த்தி, இடது செவி - சண்டேஸ்வரர், 
வாய் - ஸ்நபன மண்டப வாசல், மூக்கு - ஸ்நபன மண்டபம், புருவ மத்தி - லிங்கம், தலை உச்சி - விமானம்.
 
"தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன: த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்" என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூலிகைகளின் சாபம் தீர்க்கும் மந்திரம் என்ன தெரியுமா...?