Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துளசி மணி மாலையின் சிறப்பு பலன்கள் !!

துளசி மணி மாலையின் சிறப்பு பலன்கள் !!
துளசி செடியின் அடி பக்கத்தில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கட்டையில் இருந்து செய்யக் கூடியது தான் துளசி மாலை. துளசிச் செடியின் சின்ன சிறிய மரத்துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும். 

துளசி மாலையை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே இந்த துளசிமாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும். - Ad
 
கடையில் இருந்து புதியதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையாக இருந்தால், அதை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊறவைக்கவேண்டும். 
 
மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துளசி மாலையை, இரண்டு மணிநேரம் அந்த மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு  நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அல்லது மகாலட்சுமி படத்திற்கு சாத்திவிட்டு பிறகு  அணிந்துக்கொள்ளலாம்.
 
ஜபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக்கூடாது. 
 
பெண்களாக இருந்தால், தங்களுடைய முந்தானையில் ஜெபமணி மாலையை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் தங்களுடைய  அங்கவஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொண்டுதான் ஜெப மாலையை உருட்ட வேண்டும் என்பது சாஸ்திரம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த கிழமையில் பிரதோஷம் வந்தால் என்ன பலன்கள்...?