Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த கிழமையில் பிரதோஷம் வந்தால் என்ன பலன்கள்...?

எந்த கிழமையில் பிரதோஷம் வந்தால் என்ன பலன்கள்...?
ஞாயிறு பிரதோஷம்: சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்: பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. பலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
 
செவ்வாய் பிரதோஷம்: மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. பலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம்  நீங்கும். கடன் தொல்லை தீரும்.
 
புதன் பிரதோஷம்: புதன் திசை மற்றும் புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும்.
 
வியாழன் பிரதோஷம்: குரு பார்க்க கோடி நன்மை. பலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
 
வெள்ளி பிரதோஷம்: சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: உறவு  வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
 
சனி மஹா பிரதோஷம்: சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். பலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.  கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (24-02-2021)!