ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் கைகூடி வரும், இல்லாவிட்டால் இழுபறியாகும்.
கல்யாண மாலை கழுத்தில் விழுவதில் தாமதம், குழந்தை பாக்கியம் கிட்டுவதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும். இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.
சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய் தீபம் ஏற்றி கும்பிடுங்கள். எலுமிச்சை தீபம் கூடாது.
3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறு பிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒரு முறையாவது, பட்டீஸ்வரம் சென்று அங்குள்ள துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்து விட்டு வருவது நல்லது.
பசுவுக்கு கடலைப் பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.