திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவது நல்லது.
பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியவர்கள் சொல்வதின் அர்த்தம், பதினாறு குழந்தைகள் அல்ல. பதினாறு வகையான செல்வங்களான, நோயில்லாத உடல், சிறப்பான கல்வி, குறைவில்லாத தானியம், தீமை இன்றி பெறும் செல்வம்.
திருமாங்கல்யத்தை அணிந்திருக்கும் தாலிக்கயிறு மங்கியவுடன், அதற்கு மாற்றாக புதிய கயிறு அணிந்துகொள்ளுவது வழக்கம். திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்ம முகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவது நல்லது.
பெண்கள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து, பூஜை அறையில் விளக்கேற்றி, கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, கழுத்தில் உள்ள பழைய தாலிக்கயிற்றை கழட்டாமல், முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து, அதில் உள்ள குண்டுகளை மட்டும் எடுத்து, புது தாலி கயிற்றில் கோர்க்க வேண்டும்.
அதனை கழுத்தில் போட்ட பின்பு தான், பழைய கயிற்றை கழுத்திலிருந்து எடுக்க வேண்டும். கழட்டிய பழைய கயிற்றை உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளிலோ அல்லது கடலிலோ விட்டு விடுங்கள். திருமாங்கல்யத்தில் அனைத்து குண்டுகளையும் கோர்த்து விட்ட பின்பு, நீங்கள் இடும் முடிச்சானது இடது நெஞ்சு பக்கத்தில் தான் இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் நீரை கரைத்து வைத்துக் கொண்டு உங்கள் கழுத்தில் கட்டிய திருமாங்கல்யக் குண்டுகளை ஒற்றைபடையில் ஏழு அல்லது ஒன்பது முறை அதில் தோய்த்து எடுக்கவேண்டும். அதன் பின்பு பூஜை அறையில் உள்ள குல தெய்வத்தையும், அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு உங்கள் திருமாங்கல்யத்திற்கு குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.