Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற சில பரிகாரங்கள்...!!

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற சில பரிகாரங்கள்...!!
வீட்டில் தீய சக்திகள் இருந்தாலே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள், வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள், மனசஞ்சலங்கள் வருவது  உறவுகளுக்கிடையே பல்வேறு பிரச்சினைகள் போன்றவை வந்து கொண்டேயிருக்கும். இப்பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய தீய சக்திகளை வெளியேற்ற சில  வழிகள்.

சிறிதளவு வெண்கடுகை போட்டு புகையிட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையை வீடு எங்கும் பரவவிட்டு வந்து சுவாமி அறையில் வைத்துவிட வேண்டும். வீட்டில் அந்நாள் வரை இல்லாத மன அமைதி ஏற்பட்டு மெல்ல மெல்ல அதிகமாவதை காணலாம்.
 
நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக வெட்டி, அதை உப்பு பரப்பிய ஒரு தட்டின் நடுவே வைத்து, அதை நாம்  படுக்கும் கட்டிலுக்கு அடியில் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையை கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து  போட்டு அதை அப்படியே தூக்கி எறிந்து விட வேண்டும்.
 
கடல் உப்பை நீரில் கலந்து அந்த உப்பு நீரால் வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும்.  மேலும் குளிப்பதற்கு தண்ணீரை பிடித்து வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு கடல் உப்பு சேர்த்து அந்த நீரில் 15 நிமிடங்கள் குளிக்கும் போது, கெட்ட சக்திகள்  நீங்குவதை நீங்களே உணர முடியும்.
 
பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்கு எடுத்து வந்து சில நாட்கள் வீட்டில் வைக்கவும். பின் அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக்  கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு, அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும். இந்த தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில்  வீட்டில் தூபம் காட்ட, வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும். இது ஓர் அதிக செலவில்லாத பரிகாரம். ஆனால் பலனோ அபரீதமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனிக்கிழமையில் விரதம் இருப்பதால் என்ன பலன்கள் தெரியுமா...?