Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷீரடி சாய்பாபாவின் பொன்மொழிகள் !!

Advertiesment
ஷீரடி சாய்பாபாவின் பொன்மொழிகள் !!
நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதை செய்தாலும் என்னையே ஸ்மரணை செய்து, தியானம் செய்து உன் வேலையை செய், அதை நான் வெற்றி அடையும் படி செய்வேன்.

காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகியவற்றிற்கு தூரமாக இருந்து இயங்குபவன் உத்தம புருஷன் ஆகிறான். உன் இதயத்தில் என்னை ஸ்தாபிதம் செய். என் சுத்த தத்துவ வடிவத்தால் உன் இதயத்தை தூய்மை படுத்திகொள்.
 
இந்த மசுதி-யும், துவாரகமாயி-யும் நம்மை பெற்றெடுத்த தாயாகும். இங்கு அபாரமான தயை, இரக்கம், கருணை, தர்மம், உதாரகுணம், சாந்தி முதலியன ஒவ்வொரு செங்கல்லிலும் உண்டு.
 
எனது நாமத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நான் நிறைவேற்றுவேன். நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம்  உங்களை என்னிடம் சேர்க்கிறது.
 
என்னை எவன் தீவிரமாக விரும்புகிறானோ அவன் எப்போதும் எல்லா இடங்களிலும் என்னை காண்கிறான். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் தீபம் ஏற்றும் போது உச்சரிக்க வேண்டிய திருவிளக்கு மந்திரம் !!