Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில செய்யக் கூடாத ஆன்மிக செயல்கள்...!

சில செய்யக் கூடாத ஆன்மிக செயல்கள்...!
துர்க்கைக்கு எலுமிச்சை தீபம், சனீஸ்வரருக்கு எள்தீபம், பைரவருக்கு மிளகு தீபத்தை கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும்.

விநாயகருக்கு சிதறுகாய் உடைக்க 11, 21, 51, 101 என்ற எண்ணிக்கையில் உடைக்கலாம்.
 
சுவாமிக்கு சாத்திய எலுமிச்சம் பழத்தை சாதத்திற்கு பயன்படுத்தாமல், சாறு பிழிந்து நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
 
விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்க ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடனை  காலம் தாழ்த்தாமல் செலுத்த வேண்டும்.
 
மாவிளக்கு சுமங்கலி பூஜையின் போது வீட்டிலும், நேர்த்திக்கடனாக செலுத்தும் போது கோயிலிலும் ஏற்ற வேண்டும்.
 
சிவன் - வில்வம், பெருமாள் - துளசி, விநாயகர் - அருகம்புல், முருகன் - சிவப்புநிற பூக்கள் சிறப்பானவை. பெண் தெய்வங்களான துர்க்கை,  லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை சிறப்பு.
 
பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது. காலை ஆட்டக் கூடாது. மலலாந்து படுக்கக் கூடாது.
 
விளக்கு வைத்த பின் வளையல்களைக் கழற்றக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக்  கூடாது.
 
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக் கூடாது.
 
கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டையே வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள்தான் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள  வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (27-02-2019)!