Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்புக்கள் வாய்ந்தது ஏன் தெரியுமா...?

Advertiesment
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்புக்கள் வாய்ந்தது ஏன் தெரியுமா...?
தினமுமே பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்வது நல்லது. இயலாதவர்கள் மாதமும் இருமுறை வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்யலாம். 

திரயோதசி தினமே பிரதோஷ தினமாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரதோஷ தினமும் தனித்துவம் வாய்ந்தவை என்றபோதும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அதனால்தான் அதனை மஹா பிரதோஷம் என்று அழைக்கிறோம்.
 
சனி பிரதோஷத்தை முறையாக வழிபட நாம் செய்த கர்ம வினைகளூக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச் சனி காலக்கட்டத்தில்  பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பக்வானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
 
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். ப்ரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.
 
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும்  பலன்கள் கிடைக்கும்.
 
பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது. பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
 
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து, பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு  பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-07-2020)!