Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – சிம்மம் | Pongal Special Astrology Prediction 2025

Advertiesment
Simmam

Prasanth Karthick

, சனி, 11 ஜனவரி 2025 (12:22 IST)
பிறக்கும் புத்தாண்டு தமிழர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கலுடன் மகிழ்ச்சி கரமாக தொடங்குகிறது. தனசேர்க்கையின் மாதமான தை மாதத்தில் ராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.


 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேது -  பஞசம  ஸ்தானத்தில் புதன் -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சூர்யன் -  களத்திர  ஸ்தானத்தில் சுக்ரன், சனி -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹூ  - தொழில்  ஸ்தானத்தில் குரு (வ) -  அயன சயன போக  ஸ்தானத்தில் செவ்வாய்(வ), சந்திரன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

14.01.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று  செவ்வாய்  லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
13.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
19.01.2025 அன்று  பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து  புதன்  ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
28.01.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
05.02.2025 அன்று  களத்திர ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
சிம்ம ராசியினரே இந்த மாதம் பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதே வேளையில் ராசியை செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மேலிடத்திடம் நெருக்கம் அதிகரிக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மகம்:
இந்த மாதம் வீண் மனக்கவலை  உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

பூரம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சூரியன், சுக்கிரன்
சந்திராஷ்டம தினங்கள்: பிப்: 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்:  ஜன: 14, 15, 16; பிப்: 10, 11, 12

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – கடகம் | Pongal Special Astrology Prediction 2025