Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமே பலன்களை தருமா...?

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமே பலன்களை தருமா...?
மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர்  நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். 
 
வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும். மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்றுதான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
 
ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய  திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று  குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும். அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய  பலன்களைத்தரும்.
 
அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும்.
 
அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
 
அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத்  தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளக்கை துலக்க உகந்த நாட்கள் என்ன தெரியுமா...?