Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியானம் செய்யும் முறையும் அதனால் ஏற்படும் பலன்களும்...!!

தியானம் செய்யும் முறையும் அதனால் ஏற்படும் பலன்களும்...!!
விடியற்காலையில் எழுந்து காலை கடன்களை முடித்து வெறும் வயிற்றிலோ அல்லது காபி, டீ, வெந்நீர் குடித்து விட்டு வசதியான நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதை சுவாசத்தின் மீது எந்த மந்திரத்தையும் உச்சரிக்காமல் முழு கவனத்தையும் இயல்பாகவும் மென்மையகவும் உள்சுவாசம் மேலே செல்வதை கவனியுங்கள்.
பிறகு சுவாசம் சற்று நிற்கும் இடத்தில் (சுழுமுனையில்) சுவாசத்தை நிறுத்தி உற்று கவனியுங்கள். அதன்பின் வெளிசுவாசம் இறங்கி  நிற்பதையும் கவனியுங்கள். தொடர்ந்து வேறு எந்த ஒரு நினைப்பும் இன்றி தினமும் இருபது நிமிடங்கள் நாற்பது நாட்கள் இந்த யோகத்தை பயிற்சி செய்தால் போதும். வாதம், பித்தம், சிலேத்துமம் குறைந்தாலும், அதிகமானாலும் வருகின்ற சகல தீராத நோய்களும் கண்டிப்பாக நீங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
 
இரவில் தூக்கம் வராதபோது, மிகுந்த கோபம், காமம், குரோதம் ஏற்படும் தருவாயில், விடை காணமுடியாமல் யோசிக்கும்போதும், முக்கியமாக கணவன்-மனைவி, குழந்தைகள் மற்றும் நம் உறவுகளுக்கிடையே பிரச்சனை எழும்போதும் உடனே சுவாசத்தைக் கவனித்தால் போதும். உடனே  நல்ல தீர்வு ஏற்படுவதைக் காணலாம்.
 
பலன்கள்:
 
இந்த சிறந்த யோகத்தின் பயிற்சியின்போது சுவாசமானது அடி முடி அதாவது தலைமுதல் உள்ளங்கால் வரை சென்று கூடவே ரத்த  அழுத்தத்தை சமசீராக்கி, கபம் என்ற சளியை கறையவைத்து எல்லா பகுதிக்கும் தங்கு தடையின்றி அழைத்து செல்கிறது. அதனால் மனமும்,  உடலும் மிதமான தட்ப வெட்ப நிலைக்கு அதாவது நம் தேகத்தில் அதனதன் விகிதாசாரத்தில் மாறி ரத்த ஓட்டம் தடையின்றி செல்லும்  தருவாயில் ஐந்து நிமிடங்களில் அபாணவாயு திறந்து மலசிக்கலை நீக்கிடும். மும்மலங்கல் கண்கூடாக வெளியேறி பித்தம் தலைக்கேறாமல்  சித்தத்தை தெளியவைத்து காயத்தில் உருவாகும் சகல நோய்கள் நீங்கி மனம் தெய்வீகமாகி உடலை வழி நடத்தி ஷேத்திரமாக்கும்  யோகமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டின் படுக்கை அறையின் ஜன்னல்கள் வாஸ்து முறைப்படி எங்கு அமைப்பது நல்லது...?