Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - மிதுனம்

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - மிதுனம்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:04 IST)
யதார்த்தமாக பேசுபவர்களே! 13-ஆம் தேதி வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சுக்ரன் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
 
பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாத குணம் நீங்கும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்வீர்கள்.
 
ஆனால் 14-ஆம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். வழக்கால் பணம் வர வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழிக்காரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
 
புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். அடிப்படை வசதி, வாய்ப்புகள் கொஞ்சம் உயரும். உறவினர், நண்பர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். 16-ஆம் தேதி வரை சூரியன் 4-ம் வீட்டில் இருப்பதால் வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவது அல்லது வீட்டில் கூடுதலாக ஒரு தளம், அறை அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! வேலைக் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். நல்ல வரன் அமைய வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த, நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதற்கான பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - ரிஷபம்