Publish Date: Fri, 30 Sep 2016 (20:01 IST)
Updated Date: Fri, 30 Sep 2016 (20:08 IST)
ஆழமாகவும், அழுத்தமாகவும் பேசுபவர்களே! குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் தோன்றும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 13-ஆம் தேதி வரை உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கழுத்து வலி, சளித் தொந்தரவு, சையனஸ் தொந்தரவு, சிறுசிறு வாகன விபத்துகள் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வரும். 14-ஆம் தேதி முதல் சுக்ரன் ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள்.
16-ஆம் தேதி வரை புதன் சாதகமான வீடுகளில் செல்வதுடன் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். ஆனால் சூரியன் சாதகமாக இல்லாததால் பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
25-ஆம் தேதி வரை செவ்வாய் 8-ல் நிற்பதால் மனஇறுக்கம், முன்கோபம், இரத்த அழுத்தம், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துச் செல்லும். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தங்கள் வரும். சர்ப்ப கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் இரும்பு சத்து உடலில் குறையும். எனவே காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும்.
கன்னிப் பெண்களே! குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உயர்கல்வி முயற்சிகளும் பலிதமாகும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளும் கிட்டும். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். ஆனால் கிசுகிசு தொல்லைகள் வந்துப் போகும். யதார்த்தமான முடிவுகளால் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறும் மாதமிது.