Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்!!

Advertiesment
நவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்!!
நவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழி முறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும்.

காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்; வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.
 
நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.
 
தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.
 
கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.
 
கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.
 
தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்.
 
வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் ஜெபிப்பதும் புதன் பலத்தைக் கூட்டும். பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.
 
வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
 
பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் என்பது என்ன? இந்த நாட்களில் என்ன செய்யலாம்...?