Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாஸ்துப்படி படிக்கும் அறையை எந்த திசையில் அமைக்கலாம்...?

Advertiesment
வாஸ்துப்படி படிக்கும் அறையை எந்த திசையில் அமைக்கலாம்...?
வாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறை, எப்படி இருக்கவேண்டும், அதை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வாஸ்துவில் மிகவும் அடிப்படையான விஷயம், காற்றும் சூரியனும்தான். 

சூரிய வெளிச்சமும் சுகாதாரமான காற்றோட்டமும் இருக்கும் அறையில் நம் மனம் எளிதாகவே படிப்பில் கவனம் செலுத்தும். படிக்கும் அறையை வடகிழக்குப் பகுதியில் அமைப்பது நல்லது. அதிலும் அந்தக் குழந்தை பூமியின் சகல ஐஸ்வரியங்களும் பெற சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே வரும் வகையில் அமைக்கப்பட்ட  அறையில் படிப்பது நன்மை பயக்கும்.
 
காற்றும் சூரிய வெளிச்சமும் ஒரு வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அவசியம் வந்தே ஆகவேண்டும். அப்படி வரவேண்டுமானால் அங்கு அமைந்திருக்கும் அறையில்  ஜன்னல் இருப்பது அவசியம்.
 
வீட்டில் படிக்கும் அறை அல்லது நூலகத்தை மேற்குதிசையில் அமைப்பது சிறந்தது.அந்த அறையில் வாஸ்துப் படி கிழக்கு நோக்கியப்படி நாற்காலியைப் போட்டு படிக்க வேண்டும்.மற்றும் வடக்கு நோக்கியும் நாற்காலியைப் போட்டு படிக்கலாம். ஆனால் தெற்குச்சுவருக்கு ஒட்டினாற் போல நாற்காலியை போட வேண்டும்.
 
மேற்குத் திசைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு திசையில் அமையும் அறையில் படிக்கும் அறையாக அமைக்கலாம். புத்தக அலமாரிகள் மேற்கு  அல்லது தெற்கு சுவருக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த அறைக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும் என்றால் அதில் இளமஞ்சள், இளம்பச்சை, மஞ்சள் ஆகிய நிறத்தில் ஏதாவதுஒரு வண்ணத்தை கலந்து அடிக்க வேண்டும்.
 
குழந்தைகள் படுக்கும் அறைகள் வடமேற்கு, மேற்கு, தெற்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் கிழக்கே தலைவைத்து படுப்பது தான் சிறந்தது. ஒரு வீட்டின்  படிப்பறையை வாஸ்துப்படி அமைத்தால் மாணவர்களுக்கு சிறப்பாக ஞானம் கிடைக்கும்.வீட்டில் படிப்பறையானது தென்மேற்கு அறைக்கு வடக்கில் இருக்க  வேண்டும்.
 
படிப்பறையில் முகம் பார்க்கும் கண்ணாடி, மீன் தொட்டி போன்றவற்றை வைக்கக்கூடாது. குறிப்பாக இந்த அறையில் சூரிய ஒளி நேரடியாக படும்படி  அமைக்கக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண் திருஷ்டியின் மூலம் வரும் பிரச்சனையை தீர்க்கும் எளிய பரிகாரம்...!!