Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி கொண்ட மாவிலை தோரணம் !!

வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி கொண்ட மாவிலை தோரணம் !!
, வெள்ளி, 18 மார்ச் 2022 (09:50 IST)
வீடுகளில் மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.


இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. மாவிலை நம்முடைய வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றுமாம். அதே போல மாவிலை பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து நம் வீட்டை பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.

மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்கலத்தையும் குறிப்பதாகும். கோயில், பெரியவீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

webdunia

சுப காரியம் நடக்கும் போது மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலும் மாவிலை தோரணம் கட்டலாம். திருமண வீடுகளில் கட்டும்போது மணப்பெண், மணமகன் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் இது ஆசியை வழங்கவல்லது.

அதே போல வீட்டு வாசலில் கட்டியிருக்கும் மாவிலைகளை நன்றாக கவனித்து பார்த்தால் அது மற்ற இலைகளைப் போல அவ்வளவு எளிதில் காய்ந்து போகாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-03-2022)!