Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் சிறப்புகள் !!

Advertiesment
Meenakshi Amman Temple
, வியாழன், 14 ஏப்ரல் 2022 (11:50 IST)
மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணங்க வேண்டும். பின்னர் தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.


மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும், இன்றும், என்றும் ஆட்சி செய்வார் என்பது சிவவாக்கு. இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. அனைத்து சிவஆலயமும் முக்தியை தரும். ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில் மதுரை.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால், மதுரைக்கு வந்தாலே முக்தி. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும். மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும்.

சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும், ஆவணி மூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில். தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும், வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குருபகவானுக்கு உரிய வியாழக்கிழமை வழிபாடு !!