இயற்கையாகக் கிடைக்கும் மண்ணால் கொண்டு செய்யப்படும் அகல் விளக்கு அளப்பரிய பலன்களை கொடுக்கும்.
அகல் விளக்குகள் நவக்கிரகங்களையும் தத்துவமாக தன்னுள்ளே அடக்கியுள்ளது. அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்.
1). அகல் விளக்கு = சூரியன்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.
ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.