Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிலையை வைத்து பணத்தை வசியம் செய்ய முடியுமா...?

Advertiesment
வெற்றிலை
பணம் என்பது நிலையற்ற ஒன்று. இன்று போகும். நாளை வரும். மஹாலக்ஷ்மி பணத்திற்கு தலைவியாக இருக்கிறார். அவரை குளிர்வித்தால் உங்களிடம் இருந்து  எங்கும் போய்விட மாட்டார்.

வெற்றிலை தெய்வ கடாட்சம் பொருந்திய ஒரு மூலிகை. இந்த வெற்றிலையை வைத்து எப்படி பணத்தை வசியம் செய்வது என்று  பார்போம்.
 
வெற்றிலையில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று ஆண் வெற்றிலை. ஆண் வெற்றிலை என்பது வெற்றிலையின் வலது புறம் அதிக இலை தன்மையுடன் இருக்கும்.  பெண் வெற்றிலை என்பது வெற்றிலையின் இடது புறம் அதிக இலை தன்மையுடன் இருக்கும். மேலும் வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து  நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும். பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது. இவை இரண்டும் இந்த பரிகாரத்திற்கு உகந்தது  அல்ல. இருபுறமும் சமமாக இருக்கும் நல்ல தெய்வ வெற்றிலையை 5 என்ற எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். 
மஞ்சளில் நனைத்த காட்டன் துணி சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த 5 வெற்றிலைகளை விரித்து அதில் 11 ஏலக்காய், 11 கொட்டைபாக்கு,  அட்சதை எனப்படும் மஞ்சளில் நனைத்த அரிசி சிறிது வைத்து மொத்தமாக முடிந்து மஞ்சள் நூலில் மூன்று முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். மூன்று முடிச்சு  போடும் போது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். இது மஹாலக்ஷ்மி தேவிக்கு சமர்ப்பணம் என்ற பொருள் கொண்டது. 
 
மந்திரம்: ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை ஸ்வாஹா! 
 
பின்னர் இதை நீங்கள் பணப்பெட்டியில் வைத்து விட்டால் போதும். பணத்தை ஈர்க்கும் சக்தியை வெளிப்படுத்தும். பணப்பெட்டியில் வைத்து விட்டு இந்த மந்திரம் சொல்லி விட்டு சார்த்தி விடுங்கள். 
 
மந்திரம்: ஓம் ஸ்ரீம் யக் ஷாய குபேராய வைஸ்வரனாய தன தான்யாதி பதயே தன தான்ய சம்ரித்திம்மே தேஹி தாபய ஸ்வாஹா!! 
 
பொதுவாக பணத்தை மரப்பெட்டியில் வைப்பது தான் நல்லது. மஹாலக்ஷ்மிக்கு பிடித்தவற்றை மந்திர உச்சாடனம் செய்து பரிகாரமாக செய்வதன் மூலம் வீண்  விரயமாகாமல், கடன் பிரச்சனை இல்லாமல் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் செல்வம் நிலைக்க அற்புத பரிகார முறைகள்....!