Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் அனைத்து பூச்சொரிதல் விழா - ஆலோசனை கூட்டம்

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் அனைத்து பூச்சொரிதல் விழா - ஆலோசனை கூட்டம்
கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் அனைத்து பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் பூச்சொரிதழ் விழா கமிட்டியினர் ஆலோசனை கூட்டம் - கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது கரூர் நகர காவல்துறை கரூர் ஸ்ரீ மாரியம்மன் அனைத்து பூச்சொரிதல்  விழா கமிட்டியாரின் ஆலோசனை கூட்டம் கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. 
முன்னதாக விழாவிற்கு தலைமையேற்று பேசிய டி.எஸ்.பி கும்மராஜா, ஒவ்வொரு ஆண்டும் கரூர் மாரியம்மன் திருவிழா முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதல் விழாவிற்கு காவல்துறை முழு ஆதரவும், பாதுகாப்பும் அளிக்கிறது. இந்த ஆண்டும் அனைத்து பூச்சொரிதல் பொறுப்பாளர்களும் விழாவை சிறப்பாக முன்னெடுத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றதோடு, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த, டி.எஸ்.பி கும்மராஜா, நாட்டுப்புற கலை விழாக்களை நடத்திடுமாறும் கூறினார். 
 
மேலும் இதனை தொடர்ந்து பூச்சொரிதழ் கமிட்டியின் தலைவர் டி.சி.மதன் பேசுகையில், விழாவை சிறப்பாக நடத்தி தருமாறு அனைவரையும்  கேட்டுக்கொள்கிறேன். அதேபோல, காவல்துறைக்கு முழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விழா பொறுப்பாளர்கள் காவல்துறைக்கு முழு  ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
 
நமது அனைத்து மாரியம்மன் பூச்சொரிதல் கமிட்டி சார்பாக பூச்சொரிதல் விழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகிறோம். இந்த முறையும்  ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் பல்வேறு பூத்தட்டுகளாக அம்மனை அழங்கரித்து வருகிறோம். மொத்தமாக இந்த முறை 48 பூத்தட்டுகள்  வரவுள்ளன. விழாவை முன்னெடுத்து சிறப்பாக நடத்தி தருமாறு அனைத்து பொறுப்பாளர் சார்பிலும், அம்மன் அருள்பெற்று பயனடையுமாறு பொதுமக்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதாக கூறினார்.
 
பேட்டி : டி.சி.மதன் – பூச்சொரிதல் விழா கமிட்டித்தலைவர் - கரூர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஞ்சநேயர் வழிப்பாட்டிற்கு உகந்த நாட்கள்...!