Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

வீட்டில் செல்வம் பெருக பின்பற்றவேண்டிய ஆன்மீக குறிப்புகள்!!

Advertiesment
ஆன்மிகம்
செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது. அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
 
நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
 
ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை; மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது. குறிப்பாக  வெள்ளிக்கிழமைகளில் மாலை 5-மணி முதல் 7-மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
 
வெள்ளிக் கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து, அலசிவிட்டுவிட வேண்டும். அலசிய பின்னர், நமது  வீட்டுப் பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும். அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை  நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
 
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
 
.ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால், பாயசம், கல்கண்டு, கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.
 
வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத்  தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே  அவர்களுக்குச் சேர வேண்டும், முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்.
 
அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு
(அன்னதானம் செய் ) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
 
காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள்....!