ராம நவமி நாளில் நாம் அனைவரும் வீட்டிலேயே ராமரை வழிபடலாம். ராமர் பட்டாபிஷேகப் படமோ, ராமர் சீதை அனுமன் இருக்கும் படமோ வைத்து வழிபாடு செய்யலாம்.
மலர்கள் சாத்தி அலங்கரித்து ராம நாமம் சொல்லி அர்ச்சனை செய்யலாம். ராம நாமம் சொல்வதன் மூலம் சகல மந்திர ஜபங்களையும் செய்த பலனைப் பெற முடியும். விஷ்ணு சகஸ்ர நாமம் முழுமையையும் சொன்ன பலனைப் பெற...
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!
என்னும் வரிகளைச் சொன்னாலே போதும் என்கிறார் பரமேஸ்வரன். அத்தகைய ராம நாமத்தைச் சொல்லி நாம் அர்ச்சனை செய்தாலே ஸ்ரீ ராமனின் அருள் கிடைக்கும். எளிய நிவேதனங்களான மோர், பானகம் ஆகியனவற்றைச் செய்து படைத்து ராமநவமியை சிறப்பாகக் கொண்டாடலாம்.
பல துன்பங்களாலும் சிக்கித் தவிக்கும் நமக்குக் கிடைத்திருக்கும் அருமருந்து ராமநவமி உற்சவம். இந்த நாளில் தவறாமல் ஸ்ரீராமரை நம் வீடுகளில் வழிபட்டுப் பலன் அடைவோம்.