Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

Advertiesment
அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபிப்பதால் உண்டாகும் பலன்கள் !!
அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை 108 முறை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.


குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது.
 
அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம் பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள்  கிட்டும்.
 
அமிர்த சஞ்சீவினி மந்திரம்:
 
ஓம் நமோ பகவதி| மிருதசஞ்சீவினி| சந்தி குரு குரு ஸ்வாஹா|
 
தன்வந்திரி மந்திரம்:
 
ஓம்| நமோ பகவதே வாசுதேவாய| தன்வந்திரியே| அமிர்தகலச ஹஸ்தாய|
சர்வ ஆமய நசனாய| த்ரைலோக்ய நாதாய| ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
 
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.
 
தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும். மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்சய திருதியை தினத்தன்று நிகழ்ந்ததாக கூறப்படுபவை என்ன தெரியுமா...?