Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடிமாதத்தில் வரும் பல சிறப்பு வழிபாட்டு தினங்கள்...!!

ஆடிமாதத்தில் வரும் பல சிறப்பு வழிபாட்டு தினங்கள்...!!
வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில்  தான் தொடங்குகிறது. 
சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை  கற்கடக மாதம் என்றும் சொல்வதுண்டு. 
 
இந்த மாதத்தில் மட்டும் சிவம் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். எனவே சிவனை விட அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்கிறது.
 
ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோயில்கள் குறிப்பாக மாரியம்மன் கோயில்கள் அனைத்தும் புத்துணர்வு பெற்று காணப்படும் கூழ் வார்த்தலும், பூக்குழி இறங்குதல் போன்றவை களைகட்ட தொடங்கிவிடும்.
webdunia
இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள்  பல இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதகமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. 
 
ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது சக்திகளையும் ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே நவசக்தி பூஜை எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும்.
 
ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளோடு, ஆடிப் பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு  தினங்கள் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடி மாத ராசி பலன்கள் 2019