Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்ய நாராயண பூஜை செய்ய உகந்த சித்ரா பெளர்ணமி !!

Advertiesment
சத்ய நாராயண பூஜை செய்ய உகந்த சித்ரா பெளர்ணமி !!
பெளர்ணமி நாள் சித்திரை நட்சத்திரத்தில் வருவது மிகவும் சிறப்பு. சத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும்  நேரத்தில் செய்ய வேண்டும். 

இந்த முறை சித்ரா பெளர்ணமி நாளில் வருவது அதி அற்புதமான நாள். அதாவது பிரதோஷ வேளையில் ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.
 
சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் சூரியனின் ஒளியும், அதன் சக்தியுமே உயிரை தருகின்றன. இதனால்தான் பழங்காலத்தில் சூரியனையே மும்மூர்த்திகளாக நினைத்து மக்கள் அனைவரும் வழிபட்டு  வந்திருக்கின்றனர்.
 
ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து செய்யக்கூடிய ஒரு பூஜை இந்த சத்ய நாராயண விரத பூஜையாகும். இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ  மஹாவிஷ்ணுவே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக  குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்ரா பௌர்ணமி நாளில் சிவசக்தி வழிபாட்டு பலன்கள் !!