Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரடையான் நோன்பை எவ்வாறு கடைப்பிடிப்பது? அதன் பலன்கள் என்ன...?

காரடையான் நோன்பை எவ்வாறு கடைப்பிடிப்பது? அதன் பலன்கள் என்ன...?
காரடையன் நோன்பு ஒரு மிக்கியமான நாளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாங்கள்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம்  காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் தருணத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காரடையன் நோன்பு கடைப்பிடிக்கும் நன்னாளில், ஒரு கலசத்தின் மீது தேங்காய் மாவிலை வைத்து, கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள்  கயிறைக் கட்டவேண்டும். அதையே அம்பிகையாக பாவித்து அதில் அம்பிகையை ஆவாகனம் செய்யவேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து வழிபட வேண்டும். வனத்தில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்தபோது, சாவித்திரி அங்கு கிடைத்த கார் அரிசியையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து  வெண்ணெய்யுடன் சேர்த்து, இறைவன் - இறைவிக்குச் சமர்ப்பித்து வழிபட்டாள் என்பதால், இந்நாளில் அதுவே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
 
இந்த வருடம் காரடையான் நோன்பு 14/3/2020 (பங்குனி 1-ம் தேதி) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் காலை10:50 முதல் 11:45 மணிக்குள் சுமங்கலிப்  பெண்கள் சரடு கட்டிக்கொள்ளும் புனித நேரம் என்று பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. எனவே, இந்தப் புனித வேளையில் பழையத் தாலிச் சரடை மாற்றிக்  கட்டிக்கொள்ளலாம்.
 
அம்பிகை வழிபாட்டின்போது ‘உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நோன்பு நோற்றேன். ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாமல் இருக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும். சத்தியவான் சாவித்திரி சரித்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் தம்பதி ஒற்றுமை  மேலோங்கும்; மாங்கல்ய பலம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். மேலும் இந்த நோன்பின் பயனாக பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவர்; உடல் நலிந்திருக்கும்  கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டின் பலன்கள்...!!