Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனிபகவானின் பாதிப்பை குறைக்கும் சனிப்பிரதோஷ கிரிவலம்...!!

Advertiesment
சனிபகவானின் பாதிப்பை குறைக்கும் சனிப்பிரதோஷ கிரிவலம்...!!
7.3.2020 சனிக்கிழமை மற்றும் 21.3.2020 சனிக்கிழமை என இரண்டு நாட்களில் சனிப்பிரதோஷம் வருக்கிறது. இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சிவாலயம்  சென்று வழிபட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று சைவசித்தாந்தம் போதிக்கிறது.
இந்த நாட்களில் சிவாலயம் ஒன்றில் சிவ மந்திரம் ஒன்றை, ஒருமணிநேரம் ஜெபித்தால் ஐந்து ஆண்டுகள் தினமும் ஒரு மணி நேரம் ஜெபித்த புண்ணியம்  கிடைக்குமாம்.
 
மந்திரம்:
 
சிவசிவ என்பது தலைசிறந்த சிவ மந்திரம்.
சிவாயநம என்பது மிகச்சிறந்த சிவ மந்திரம்.
 
உங்களுக்குப் பிடித்த எந்த ஒரு சிவ மந்திரத்தையும் ஜபிக்கலாம். சனியின் பாதிப்பினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மகர ராசிக்காரர்கள் இந்த சனி பிரதோஷம் அன்று பகலில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.
 
மாலை 4.30 மணிக்குள் எட்டாவது லிங்கமான ஈசான லிங்கத்துக்கு வந்து, அங்கே நடைபெறும் சனி பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளலாம். சனி பிரதோஷ பூஜையின் போது நந்தி பகவானின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் நடராஜ வடிவம் எடுத்து நடனம் ஆடுவதாக கற்பனை செய்துகொண்டு ஏதாவது ஒரு சிவ  மந்திரம் ஜெபிக்கலாம்.
 
மாலை 6 மணிக்கு பிறகு அண்ணாமலையார் ஆலயம் சென்று, அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசிக்கலாம். நிறைவாக கால பைரவரை  தரிசிப்பது சிறப்பு.
 
அங்கே ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை 30 நிமிடங்கள் ஜெபிப்பதினால் நல்ல பலன்கள் உண்டாகும். அல்லது 108 முறை ஜெபிக்க வேண்டும்.  இப்படிச் செய்வதால் சனி கிரகத்தின் உக்கிரம் பெருமளவு குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காயத்ரி மந்திரத்தை எவ்வாறு முறையாக ஜெபிக்கவேண்டும் என்பதை பார்ப்போம்...!!