Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்கழி மாத திருவாதிரை விரதத்தினை எவ்வாறு கடைப்பிடிப்பது....?

மார்கழி மாத திருவாதிரை விரதத்தினை எவ்வாறு கடைப்பிடிப்பது....?
, சனி, 18 டிசம்பர் 2021 (10:44 IST)
சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் அற்புதமான நாள். கணவனின் தீர்க்க ஆயுள் வேண்டி பெண்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடும் நாள்.  திருவாதிரை விரதத்தினை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர். இந்த மாங்கல்ய நோன்பு நாளை கடைபிடிக்கப்படுகிறது.
 
திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும். 
 
மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். வழிபாட்டிற்குரிய நேரம் : இரவு 6:00 மணி முதல் 8:00 மணி வரையாகும்.
 
நோன்பை நிறைவு செய்ய விநாயகருக்கு 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உட்கழுத்துசரடு எனும் மாங்கல்ய நூலணிகளை அணிந்து நோன்பை நிறைவு செய்யலாம். பின்னர் விருந்து சாப்பிட்டு அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள். மேலும்  ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவாதிரை விரதம் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது தெரியுமா...?