Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ருத்ராட்சத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்....?

ருத்ராட்சத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்....?
, வியாழன், 9 டிசம்பர் 2021 (15:08 IST)
ருத்ராட்சத்தை சிகப்பு கயிற்றில் கட்டி கழுத்தில் அணியலாம். அல்லது தங்க சங்கிலியிலும்  - வெள்ளி சங்கிலியிலும் கழுத்தில் அணியலாம். ஆனால் கறுப்பு கயிற்றில் கட்டக் கூடாது.

ருத்ராட்சத்தின் மேல் பக்க முகம் பிரம்மா. கீழ்ப்புறம் விஷ்ணு. நடுப்பகுதி ருத்திரன் என்கிறது சாஸ்திரம். அதனால் ருத்ராட்சம் அணிந்தால் முப்பெரும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும்.
 
ருத்ராட்சத்தை நன்றாக கவனித்து தரம் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். முள் இல்லாதவையாக இருக்க வேண்டும். பூச்சி அரித்தவையாக இருக்கக் கூடாது. பிளவும் இருக்கக் கூடாது.
 
முதன் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள், சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று அணிந்தால் நன்மை. ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தால் இன்னும் கைமேல் பலன் கிடைக்கும். 
 
நெல்லிகாய் அளவு கொண்ட ருத்ராட்சம் மிகவும் உயர்ந்த பலனை தரும். இலந்தை பழ அளவு ருத்ராட்சம் மத்திமம். கடலை அளவுள்ள ருத்ராட்சம் அதமம்.
 
ருத்ராட்சத்தால் சிவலிங்கத்தை அலங்கரித்தால், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிட்டும். பித்ருதோஷம் நீங்கும். தலைமுறை தலைமுறைக்கு இன்னல் இல்லா வாழ்க்கை அமையும்.
 
சிவன் தந்த ருத்ராட்ச்தை அணிபவர்கள் ருத்ர சொரூபமாகவே மாறி விடுகிறார்கள். வேலனுக்கு வேலாயுதம் போல, எந்த ஆபத்தான சமயத்திலும் நம்மை காக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாலையணிந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்கவேண்டியவைகள் !!