Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹோமங்கள் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

Advertiesment
ஹோமங்கள்
முக்கியமாக, ஹோமங்களை மதியம் 12 மணிக்குள் முடித்து விடுவதே உத்தமம். திருமணமானவர்கள், தம்பதி சமேதராக அமர்ந்து ஹோமங்களைச் செய்வது அதிக பலன்களைத் தரும் என்கின்றனர்.

நவக்கிரக ஹோமம்: ஸ்ரீசௌபாக்ய லட்சுமி ஹோமம் ஆகியவற்றை கண்டிப்பாக அதிகாலையில் செய்ய வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் செய்வதால் தெய்வ அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
கணபதி ஹோமங்கள்:  எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புதுவீட்டில் குடியேறுவதற்கும், புது தொழில் தொடங்கவும் இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.
 
சுதர்ஸன ஹோமம்: நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி கொள்ளவும் இந்த ஹோமம் செய்யப்படுவது.
 
நவகிரக ஹோமம்:  நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யப்படும் ஹோமம் இது.
 
லட்சுமி குபேர ஹோமம்: தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் இந்த லட்சுமி குபேர ஹோமம் செய்யப்படுகிறது.
 
சரஸ்வதி ஹோமம்: கல்வி அறிவு பெருகச் செய்யப்படுவது இந்த சரஸ்வதி ஹோமம்.
 
சண்டி ஹோமம்: நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் செய்யப்படுவது.
 
ஆயுஷ்ய ஹோமம்: நீண்ட ஆயுள் வேண்டிச் செய்யப்படுவது ஆயுஷ்ய ஹோமம்.
 
தன்வந்திரி ஹோமம்: நோயற்ற வாழ்வு பெற செய்யப்படும் ஹோமம்.
 
தில ஹோமம்: எம பயம் நீங்க செய்யப்படுவது தான் இந்த தில ஹோமம்.
 
ஆவஹந்தி ஹோமம்: தானியம் செழிக்க விவசாயிகள் செய்யும் ஹோமம்.
 
மாக ம்ருத்யுஞ்ஞய ஹோமம்: அகால மரணத்தை வென்று நீண்ட நாள் வாழவும் எல்லாவிதமான பயங்கள் நீங்கவும் செய்யப்படுவது.
 
வாஸ்து ஹோமம்: வீட்டு பிரச்சனைகள் நீங்க பயன்படுவது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-12-2021)!