Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வம் பெருக செய்யவேண்டிய பரிகார முறைகள்...!!

Webdunia
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள்  விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால், பாயசம், கல்கண்டு, கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.
 
வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத்  தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே  அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்.
 
நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு. 80.அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு (அன்னதானம் செய்ய) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில்  வாசம் செய்வாள்.
 
காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.
 
முதலில் பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.தம்பி மேல் பாசம் அதிகம் இருக்கும்.
 
சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments