கடலை எண்ணெயில் இருந்து வரும் ஒருவித நெடி பல தீமைகளை விளைவிக்கும் என்பதால் அந்த எண்ணையை நமது முன்னோர்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தவிர்த்தனர்.
ஒருசில நாட்களில் அவசியம் கடலை எண்ணெயில் விளக்கு ஏற்றுவதையும் தவிர்க்க முடியாது என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். குறிப்பாக கிரகணங்கள் ஏற்படும் தினங்களில் அவசியம் கடலை எண்ணெயில் விளக்கேற்றி வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வருடத்திற்கு ஒரு சில நாட்களில்தான் கிரகணங்கள் வருகிறது என்பதால், கடலை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கத்தை அறவே மறந்துவிட்டனர் நமது மக்கள்.
உண்மையில் கிரகணங்கள் ஏற்படும் சமயங்களில் ஒருவித கெடுதல்தரும் கதிர்வீச்சுக்கள் பூமியெங்கும் பரவும், இதன்காரணமாகத்தான் பரிசுத்தமாக விளங்கும் கோவில்களைக்கூட திறப்பது கிடையாது. கிரகணங்கள் முடிந்ததும் ஒருசில பூஜை புணஸ்காரணங்களை செய்து ஆலயத்தை தூய்மைபடுத்திய பின்பே இறைவன் குடியிருக்கும் சன்னதிகளை திறப்பது வழக்கம்.
கிரகணம் ஏற்படும் சமயங்களில் தீய கதிர்கள் பரவும், அந்த தீய கதிர்கள் மனிதர்களுக்கு ஒருசில உபத்திரவாதத்தை தரும் என்பதால் அந்த சமயத்தில் உணவருந்துவதை தவிர்த்தனர் நமது முன்னோர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தீய கதிர் வீச்சினால் எந்த கெடுதலும் ஏற்படக் கூடாது என்பதால் தனி அறையில் இருக்குமாறும் பார்த்துக்கொண்டனர், அதிகப்படியான உணவுகள் ஏதும் செய்யாமல் தவிர்த்தனர், அவ்வாறு அதிகப்படியான உணவு இருந்தாலும், அதில் ஒருசில தர்ப்பை புல்லை போட்டுவைத்தும், குடிநீரில் துளசி, அருகம்புல், தர்ப்பை புல் போன்றவற்றை போட்டு உணவையும், குடிநீரையும் பாதுகாத்தனர்.
கிரஹணங்களின் போது வெளிவரும் கெடுதல் சக்திகளை தடுக்க, கிரகணங்களின் போது கடலை எண்ணெய்யை ஒரு பெரிய அகலில் ஊற்றி அதில் ஏதேனும் விளக்கு திரியை போட்டு, ஒன்று அல்லது பல இடங்களில் கடலை எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தனர் நமது முன்னோர்கள்.