Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை கிரகணத்தின் போது டி.வி பார்க்க கூடாது – ஆன்மீக குருஜி மதாஜி பேட்டி (வீடியோ)

நாளை கிரகணத்தின் போது டி.வி பார்க்க கூடாது – ஆன்மீக குருஜி மதாஜி பேட்டி (வீடியோ)
, வியாழன், 26 ஜூலை 2018 (16:58 IST)
நாளை ஏற்படும் சந்திரகிரஹணம் ஏற்படும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என ஆன்மிக குருஜி மாதாஜி அறிவுறுத்தியுள்ளார்.

 
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், லலிதா சங்கத்தின் 60 ஆம் ஆண்டு விழாவினையொட்டி, 48 சங்கன சுவாமிகள் செய்து வைத்து, காய்கறி அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு விஷேச வழிபாடு நடைபெற்றது. 
 
மேலும், லலிதா சஹஸ்கர நாமம் பாராயணம் செய்யப்பட்டது. குரு பூர்ணிமாவினையொட்டி, சந்திரகிரஹணம் நாளை நடைபெறுவதால் இன்றே முன் கூட்டியே அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. 
 
இப்பூஜையில் ஆன்மிக குருஜி மாதாஜி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பெளர்ணமி அன்று வரும் இந்த சந்திர கிரகனத்தில் கர்ப்பினி பெண்கள், வீட்டிற்குள் இருக்க வேண்டுமென்றும், கிரகன நேரத்தில் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும் கோயில்கள் மற்றும் வீடுகளில் மந்திரங்கள் கூறி, ஆரோக்கியம் பெற அறிவுறுத்தப்பட்டது.  நூறு வருடங்களுக்கு பிறகு வரும் இந்த கிரகணங்கள், சிவப்பு நிறத்தில் வருவதால் கண்களால் பார்க்கலாம் என்றும் குருஜி மாதாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
பேட்டி : மாதாஜி – திருஈங்கோய்மலை – ஸ்ரீ லலிதா மகிளா சமாஜம் 

 
-சி. ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மூடப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில்