Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதோஷம் அன்று விரதமிருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்

Advertiesment
பிரதோஷம் அன்று விரதமிருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்
சனி கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு பலன் அதிகம். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என்று அழைப்பர். பாற்கடலில் இருந்து அமிர்தத்தோடு தோன்றிய விஷத்தை சிவபெருமான் சனி கிழமையில்தான் உண்டார். ஆகையால சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.
அன்று கோயிலுக்கு சென்று வழிபடுவதால் சனியால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் விலகி செல்லும். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் இன்று விரதமிருந்து வழிபட்டால் சனி பிரதோஷத்தன்று சிவன் கோயிலிற்கு சென்றால் ஐந்து ஆண்டுகள்  சிவன் கோயிலிற்கு சென்ற பலன்களை பெறலாம் என்கிறார்கள் சிவனடியார்கள்.
 
பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவன் கோவிலுக்கு சென்று அருகம்புல்லை நந்தி தேவருக்கு அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி நந்தியையும் சிவனையும் மனதார வழிபட்டு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின் சனிபகவானை வணங்க  வேண்டும். இதன் மூலம் சனி பகவானால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் விலகும்.
 
சனி பிரதோஷ வழிபாட்டை எவர் ஒருவர் முறையாக செய்கிறாரோ அவருக்கு 120 வருட பிரதோஷ வழிபாட்டிற்கான பலன்  கிடைக்கும் என்கிறது சிவகாமம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்