Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

Advertiesment
Magaram

Prasanth Karthick

, வியாழன், 30 ஜனவரி 2025 (09:01 IST)
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:


ராசியில் சூரியன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ - பஞசம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

05.02.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று ராசியில் இருந்து சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் 
26.02.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

மகர ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகி வேலையில் சேர்ந்துவிடுவார்கள்.

வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருந்தாலும் போட்டிகளை சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். கோபப்படும் தருணங்களைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். மற்றபடி வெளிச் சந்தைகளை தேடிச் சென்று விற்பனையை விரிவு படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடம் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து முக்கியப் பணிகளைக் கொடுக்கும். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களின் திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக சில புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். புதிய பாணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். சந்தர்ப்பங்களைத் தவற விடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு துறையில் வளர்ச்சி அடைவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார், உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். தெய்வ பலம் அதிகரிக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். பண வரவு  சீராகவே இருக்கும்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். பாடங்களை மனப்பாடம் செய்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

உத்திராடம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

திருவோணம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசுவதால்   வருத்தங்கள் நீங்கும்.  பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.

அவிட்டம்:

இந்த மாதம் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும். மரிக்கொழுந்து அல்லது துளசியை பெருமாளுக்குப் படையுங்கள்.

சந்திராஷ்டம தினங்கள் : 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!