Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஜைகளின் போது மாவிலைத் தோரணங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதேன்...?

பூஜைகளின் போது மாவிலைத் தோரணங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதேன்...?
மாவிலைத் தோரணங்கள் இருக்கும் இடங்களில் துர்தேவதைகள் வாசம் செய்யாது என்பது ஐதீகம். பசுமையாகவே இருந்து அழுகாமலேயே  குணம் மாறாமல், காயும் சிறப்பு மிக்க இலை மாவிலை. பூஜைகளின் போது கலச வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். 
வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளும், பூஜைகளும், விசேஷங்களும் சிறப்பாக அலங்கரிக்க மாவிலைத் தோரணம் உதவுகிறது. விசேஷங்களில்  மட்டும்தான் மாவிலைத்தோரணம் கட்டவேண்டுமென்பதில்லை. எளிதாக மாவிலை கிடைக்கும் பட்சத்தில் மாவிலைத் தோரணம் காய காய  புதிய தோரணத்தை வாசலில் அலங்கரிக்கலாம்.
 
வீடுகளில் மட்டுமல்ல முன்பெல்லாம் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் மாவிலைத் தோரணமும் சேர்ந்தே வரவேற்கும். இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை சுத்தம் செய்து தருகிறது. 
webdunia
வெளியே சென்று வீடு திரும்பும் போது வெளியில் மாசுபட்ட இடங்களிலிருந்து தூசியும், புழுதிகளும், கிருமித்தொற்றும் நம் பின்னாடியே  தொற்றிக் கொண்டு வீட்டுக்குள் வரும். கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை  வாசலிலேயே தடுத்துவிடும் ஆற்றல் மாவிலைக்கு உண்டு. மிக முக்கியமாக மாவிலை கரியமில வாயுவை-கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு சுத்தமான பிராண வாயுவை ஆக்ஸிஜனை   வெளியிடுகிறது. 
 
அதனால் தான் மக்கள் கூடும் இடங்களில் அதிகம் படர்ந்திருக்கும் கரியமில வாயுவை தன்னுள் ஈர்க்க மாவிலைத் தோரணங்களை முக்கியமாக பரப்பியிருந்தார்கள் முன்னோர்கள். மேலும் தீய சக்திகளை தீய அதிர்வுகளை விலக்கி நல்ல அதிர்வுகளைத் தருவதிலும்  மாவிலை முதன்மையாக இருக்கிறது.  
 
ஆன்மிக ரீதியாக அற்புதமான விஞ்ஞானத்தை முன்கூட்டியே கணித்து அதைப் பின் பற்றிய நம் முன்னோர்களின் சந்ததி வழியில் தோன்றிய  நாம் இன்று மாவிலைத் தோரணத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இப்போது எல்லாம் வாசலை அலங்கரிக்க செயற்கை பூக்களைத்  தொங்கவிடுகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-04-2019)!