Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளின் படிக்கும் அறையை எந்த திசையில் அமைப்பது நல்லது...?

குழந்தைகளின் படிக்கும் அறையை எந்த திசையில் அமைப்பது நல்லது...?
வீட்டில் படிக்கும் அறை அல்லது நூலகத்தை மேற்குதிசையில் அமைப்பது சிறந்தது. அந்த அறையில் வாஸ்துப் படி கிழக்கு நோக்கியப்படி  நாற்காலியைப் போட்டு படிக்க வேண்டும். மற்றும் வடக்கு நோக்கியும் நாற்காலியைப் போட்டு படிக்கலாம். ஆனால் தெற்குச் சுவருக்கு  ஒட்டினாற்ப் போல நாற்காலியை போட வேண்டும்.
மேற்குத் திசைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு திசையில் அமையும் அறையில் படிக்கும் அறையாக அமைக்கலாம்.
 
புத்தக அலமாரிகள் மேற்கு அல்லது தெற்கு சுவருக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த அறைக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும் என்றால்  அதில் இளமஞ்சள், இளம்பச்சை, மஞ்சள் ஆகிய நிறத்தில் ஏதாவதுஒரு வண்ணத்தை கலந்து அடிக்க வேண்டும்.
 
குழந்தைகள் படுக்கும் அறைகள் வடமேற்கு, மேற்கு, தெற்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் கிழக்கே தலைவைத்து படுப்பது தான்  சிறந்தது. அந்த அறையில் எந்த ஒரு தேவை இல்லாது பொருட்களும் இருக்க கூடாது. 
 
வெளிச்சமும், காற்றும் வாஸ்துவிர்த்து இரு கண்கள் போன்றவது ஆகையால் குழந்தைகள் படிக்கும் அறையில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும்படி ஜன்னல்கள் அமைக்கவேண்டும்.
 
ஒரு வீட்டின் படிப்பறையை வாஸ்துப்படி அமைத்தால் மாணவர்களுக்கு சிறப்பாக ஞானம் கிடைக்கும். வீட்டில் படிப்பறையானது தென்மேற்கு  அறைக்கு வடக்கில் இருக்க வேண்டும்.
 
படிக்கும் அறைக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி மீன் தொட்டி ஆகியவற்றை வைக்கக் கூடாது. இந்த அறைக்கும் சூரிய வெளிச்சம் நேராக  வந்து விழக் கூடாது. 
 
படிக்கும் அறையில் வாஸ்து முறைகளை கடைபிடிக்கும் போது அதில் அமர்ந்து படிக்கும் விஷயங்கள் எல்லாம் நன்றாக மனதில் பதியும். இந்த அறை சரஸ்வதி வாசம் செய்யும் அறை என்பதால் தூய்மையாக இருக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா...?