Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமையலில் இவற்றை தவிர்ப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகுமா....?

Advertiesment
சமையலில் இவற்றை தவிர்ப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகுமா....?
, திங்கள், 13 டிசம்பர் 2021 (20:20 IST)
வீட்டில் பணம் தங்காமல் செலவழிந்து கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை என்றும் பலர் புலம்பி கொண்டிருப்பார்கள். என்ன தான் அதிகம் சம்பாதித்தாலும், அதிகமாக உழைத்தாலும் சம்பாதிக்கின்ற பணத்திற்கு ஏற்றவாறு செலவுகள் வந்து கொண்டிருக்கின்றன என சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் இடத்தில் மகாலட்சுமி நித்திய வாசம் செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு நமது வீட்டிலும் மகாலட்சுமி தலை கொண்டிருக்க நாம் பல கோவில்களுக்கு சென்று வருகின்றோம். 
 
நம்மையும் அறியாமல் நமது வீட்டில் செய்யும் சிறு தவறுகள் தான். அவ்வாறு வெள்ளி, செவ்வாய் கிழமையில் பூஜை செய்யும்பொழுது வெண்ணெய் உருக்குவது போன்ற செயலை செய்தல் கூடாது. இவ்வாறு செய்வதினால் மகாலட்சுமி நமது வீட்டை விட்டு வெளியேறி விடுவார், என்று ஆன்மீக குறிப்புகளில் சொல்லப்படுள்ளன. ஆனால் சாப்பிடும் உணவில் பால், தயிர், மோ,ர் வெண்ணெய், இவற்றை கலந்து சாப்பிடுவது என்பதை செய்யலாம்.
 
அதேபோல் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், விசேஷ நாட்களிலும் கசப்பு காய்கறியான பாகற்காய் சமைப்பதை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும். அதேபோல் உறவினர்கள் வீட்டிற்கு வரும் பொழுதும் இந்த பாகற்காயை சமைப்பது என்பது கூடாது. இது பகைமையை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது. இனிமையான நாட்களில் இந்தக் கசப்பான காய்கறியை சமைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கப் பெறாமல் சென்றுவிடுகிறது. இறைவனுக்கு படைப்பதற்காக செய்யப்படும் நெய்வேத்திய உணவுகளில் சிலர் உப்பிட்டு சமைப்பார்கள். ஆனால் இந்த பலகாரங்களில் உப்பு போடுவதை தவிர்த்து விடவேண்டும். இறைவனுக்கு சமர்ப்பிக்கும் உணவில் இவ்வாறு உப்பு சேர்ப்பது லட்சுமி கடாட்சத்தை குறைகிறது. 
 
அடுத்ததாக பலர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு முக்கியமான தவறு என்னவென்றால் வெள்ளி, செவ்வாய்க் கிழமையில் கீரை சமைப்பதை தவிர்த்துவிட வேண்டும். அதேபோல் உப்பைக் கொட்டி வைக்கும் உப்பு ஜாடியில் உப்பினை கையால் எடுத்து உபயோகப் படுத்துவது என்பதையும் தவிர்த்துவிட வேண்டும். இவை அனைத்தும் மகாலட்சுமியின் அம்சத்தை இழப்பதற்கான செயல்களாகும். இவ்வாறு மகாலட்சுமிக்கு பிடிக்காத செயல்கள் அனைத்தையும் செய்வதென்பதை தவிர்த்து விட்டால், நமது வீட்டிலும் மகாலட்சுமி தேவி நிச்சயம் குடி கொண்டிருப்பாள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் மகத்துவம் வாய்ந்தது ஏன் தெரியுமா...?