அன்னாசி பழத்தில் வைட்டமின் B என்னும் உயிர்சத்து அதிக அளவில் உள்ளது, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி விளங்குகிறது. உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு மிக சிறந்த டானிக்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி வற்றல்களாக செய்து தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைபடுதல் ஆகும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
அன்னாசி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.
அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் A சத்து உள்ளது. வைட்டமின் A சத்தானது பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட அன்னாசிபழம் உதவுகிறது.
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகிறது.
தொண்டைப் புண், தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற அன்னாசிப்பழச் சாறு அருந்தி வரலாம். அன்னாசி பழ சாற்றால் வாய் கொப்பளித்தால் தொண்டை அழற்சி குணமாகும்.