Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது ஏன் தெரியுமா...?

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது ஏன் தெரியுமா...?
இந்துக்கள் கலாச்சாரத்தில் நமஸ்காரம் என்பது மிகவும் முக்கியமானது. கடவுள் வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும் நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது  மிகவும் புனிதமானது. 
நமஸ்காரம் செய்யும்போது உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும். சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக “தண்டகார நமஸ்காரம்” மற்றும் “உதண்ட நமஸ்காரம்” என்றும் அறியப்படுகிறது.
 
இந்த நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம் என்று நம்பப்படுகிறது. அடக்கத்தைக் குறிக்கும் சாஷ்டாங்க நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை நீக்கும் ஒரு உன்னதமான செயல்முறை ஆகும்.
 
சாஷ்டாங்க நமஸ்காரம் புரியும் பொழுது அந்த நபரின் வயிறு தரையில் பட வேண்டும். மேலும் அந்த நபரின் எட்டு அங்கங்களும் தரையைத்  தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள், கால்கள், முழங்கால்கள், உடல், மனம் மற்றும்  பேச்சைக் குறிக்கும். இந்த நமஸ்காரம் பொதுவாக ஆண்களால் செய்யப்படுகிறது.
 
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே புரிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. எனவே அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய  அனுமதியில்லை. 
 
பெண்களின் கருப்பையானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத வேலையைச் செய்கின்றது. அவர்களின் மார்பகமானது குழந்தைக்கு பாலூட்டும் உயரிய வேலையைச் செய்கின்றது. எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?