Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது ஏன் தெரியுமா...?

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது ஏன் தெரியுமா...?
அழியா வரம் வேண்டி அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் உருவானது அந்த விஷம் உலகை அழித்துவிடாதபடி அதை ஒன்றுதிரட்டி அருந்தி விட்டார் சிவபெருமான். 

அதைக்கண்டு பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கி விடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழுத்திலேயே தங்கும்படி செய்தாள். இதையொட்டியே சிவனாருக்கு திருநீலகண்டன் என்றும் திருப்பெயர் உண்டு.
 
விஷம் அருந்திய சிவப்பரம்பொருளின் அருளாடல் தொடர்ந்தது. அதீத களைப்பு மேலிட்டது போல் அப்படியே படுத்துவிட்டார் சிவனார். இதனால் ஆதிசக்தி முதலாக அண்டபகிரண்டமும் கலக்கம் அடைந்தது. விரைவிலேயே அவர்கள் கலக்கம் நீங்கும் வகையில் கண்விழித்த சிவனார் ஆனந்த தாண்டவம் புரிந்தார். அப்படி, அவர் ஆனந்தத்துடன் திருநடனம் புரிந்தது பிரதோஷ காலம். 
 
பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில்; களைப்புற்றவராக பள்ளி கொண்டது துவாதசித் திருநாளில். உலக உயிர்கள் மேன்மையுறும்பொருட்டு அவர் சந்தியா தாண்டவம் ஆடியது. திரயோதசி புண்ணிய தினத்தில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலத்தில். புனிதமான இந்தக் காலத்தையே பிரதோஷ வேளையாகக் கருதி, சிவபூஜை செய்து வழிபடுகிறோம். 
 
தொடர்ந்து 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள், சாரூப பதவி பெற்று சிவகணங்களாகத் திகழ்வர் என்கின்றன புராணங்கள். அதிலும் சனிக்கிழமையுடன் இணைந்து வரும் சனி மஹா பிரதோஷம் மிகச்சிறப்பானது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சகல பாவங்களையும் போக்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு !!