Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனி பகவானை நேருக்குநேர் நின்று வணங்கக்கூடாது ஏன் தெரியுமா...?

சனி பகவானை நேருக்குநேர் நின்று வணங்கக்கூடாது ஏன் தெரியுமா...?
கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. 

சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம். 
 
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், திருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப  பலனையே ஏற்படுத்தும். 
 
சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால் நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருடனை தரிசிப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன...?