Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

சில பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது அது என்ன தெரியுமா...?

Advertiesment
சில பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது அது என்ன தெரியுமா...?
சில பொருட்களை தானம் கொடுப்பது அறவே கூடாது. அவ்வாறு செய்தால் உங்களுக்குதான் சிரமங்கள் ஏற்படும் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது. தானங்கள்  செய்வது நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை பெற்றுத்தரும். 

பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை, ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி  மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
 
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும் என வள்ளலார் அருளியிருக்கிறார்.
 
எனினும் சிறப்பான பலன்களை தரக்கூடிய தானத்தை கூட நாம் ஒரு சில பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 3 பொருட்களை தானமாக கொடுத்தீர்கள் எனில் அது நமக்கு பாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
 
கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி  வரும். பழைய உணவுகளை தானமாக கொடுத்தீர்கள் எனில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும்.
 
மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (05-12-2020)!