Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம் அணியக்கூடாது என்று தெரியுமா...?

Advertiesment
ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம் அணியக்கூடாது என்று தெரியுமா...?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள்வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுபிறவி இல்லை மஹா பேரானந்தமே.

இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
 
நீராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது  நம் அனைவருக்கும் தெரியும்.
 
பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும்  படிப்படியாகக் குறைந்து விடும். மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும்.
 
ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே  தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சப்தமி விரதம் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள் !!