Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை தரும் தெரியுமா...?

Advertiesment
12 ராசிகள்
எந்த ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வழங்கும் என்பதையும் சொல்ல முடியும்.அந்த நாளில் அந்த ராசிக்காரர்கள் தங்களது முக்கிய பணிகளை மேற்கொண்டால், வெற்றிக் கிட்டும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றிக்கிட்டும். நீங்கள் மற்றவர்களிடம் உங்களது திறமையை வெளிக்காட்ட நினைத்தால், இந்நாளில் மேற்கொள்ளுங்கள், இதனால் வெற்றி உங்களுக்கே.
 
ரிஷபம்: வெள்ளி, புதன், சனி மற்றும் திங்கள் போன்ற கிழமைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். செவ்வாய் கிழமைகளில் ஊதாரித்தனமான செலவுகளைச் செய்யக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.
 
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன் கிழமைகளில் மேற்கொண்டால் நல்லது நடக்கும். மொத்தத்தில் இந்த கிழமை உங்களுக்கு முன்னேற்றத்தை மட்டுமே தரும்.
 
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகள் வெற்றியை வாரி வழங்கும். புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. சனிக்கிழமை சாதகமில்லாத நாள். இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் விரதமிருப்பது நல்லது.
 
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஞாயிற்று கிழமை சிறந்த நாள். இந்நாளில் உங்களது திறமையை முழுமையாக காணலாம். இந்நாளில் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றியை மட்டுமே பரிசாகப் பெறுவீர்கள்.
 
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், வெள்ளி, திங்கள் மற்றும் வியாழக் கிழமைகள் அதிர்ஷ்டத்தை வழங்கும் தினங்கள். ஞாயிறு, செவ்வாய், சனி போன்ற தினங்களில் எந்த ஒரு முக்கியமான மற்றும் புதிய விஷயத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், தாங்க முடியாத அளவில் படுதோல்வியை சந்திக்கக்கூடும்.
 
துலாம்: இந்த ராசிக்கு வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் உங்களது ராஜதந்திர மனோபாவம், நிறைய மக்களுடன் பழகவும், அதிக புகழையும் வாங்கித் தரும். மொத்தத்தில் இந்நாள் உங்களை உயரச் செய்யும்.
 
விருச்சிகம்: ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான தினம். இந்நாளில் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகள் சாதகமற்றது. இந்நாளில் எந்த ஒரு முக்கிய விஷயங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.
 
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமை அதிர்ஷ்டமான தினம். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது வெற்றியைத் தரும்.
 
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை உகந்தது. இந்நாளில் இவர்கள் செய்ய நினைக்கும் செயல்களை மேற்கொண்டால், அவர் இதுவரை நினைத்திராத பலன் கிடைக்கும். இந்நாளில் இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் மற்றும் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடும். இதனால் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
 
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் போன்ற தினங்கள் அதிர்ஷ்டமான நாட்கள். புதன் மற்றும் சனி அதிர்ஷ்டமற்ற நாட்கள். ஞாயிற்றுக்கிழமை கலவையானது.
 
மீனம்: மீன ராசிக்காரர்களே! உங்களுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் உங்களது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது மற்றும் இந்நாளில் நீங்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோமாதாவின் உடற்பகுதியில் உறையும் தெய்வங்கள் என்ன தெரியுமா...?